தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

உலக சினிமா வரலாற்றில் மிகப்பெரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுதான். ஒரு பக்கம் ஆஸ்கர் விருதுகளை பெறுவது பெருமை என்கிற போட்டியில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து பலரும் தங்களது படைப்புகளை அனுப்பி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இந்த 2023ம் வருடத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் படங்களை தேர்வு செய்வதற்கு என 398 பேர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், இசையமைப்பாளர் மரகதமணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதே சமயம் இந்த பட்டியலில் பெரிதாக வெளியே தெரியாமல் போன இன்னொரு நபரும் இருக்கிறார். அவர்தான் கேரளாவை சேர்ந்த விஎப்எக்ஸ் நிபுணர் சனத். இவர் மலையாளத்தில் புலிமுருகன், தெலுங்கில் பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களுக்கு விஎப்எக்ஸ் பணியில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர். தற்போது ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் இடம் பெறுபவர்கள் 19 வகையான பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் விஎப்எக்ஸ் பிரிவில் சனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.