ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் டத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் நிலையில் மற்றொரு பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளார் கூறப்படுகிறது. அதன்படி, இந்த படத்தில் ஹிந்தி இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் மிஷ்கின், கவுதம் மேனன் என இயக்குனர்கள் நடிகர்களாக நடிக்கின்றனர். இவர்களை தொடர்ந்து இயக்குனர் அனுராக் நடிகராக நடிப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் லோகேஷின் படத்தில் சின்ன கேரக்டரிலாவது தான் நடிக்க வேண்டும் என்ற ஆசையை அனுராக் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.