ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டில் வெளியான படம் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்'. அப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக அறிமுகமானவர் நிஹாரிகா கொனிடலா. இவர் தெலுங்கின் சீனியர் கதாநாயகன் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள். இவருக்கும் சைதன்யா ஜொன்னலகட்டா என்பவருக்கும் கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் உதய்பூரில் உள்ள ஓபராய் உதய்விலாஸ் என்ற இடத்தில் திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
திருமணமான இரண்டு வருடங்களிலேயே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்த கணவர் சைதன்யாவின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார் நிஹாரிகா. அப்போதே இருவரும் பிரிந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், அவரது தரப்பிலிருந்து இது பற்றி எதுவும் சொல்லவில்லை.
இந்நிலையில் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வாங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நிஹாரிகா தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இதனிடையே, நிஹாரிகாவின் சித்தப்பாவான பவன் கல்யாண் அவரது மூன்றுவாது மனைவியான ரஷிய நாட்டைச் சேர்ந்த அன்னா லெஸ்னோவாவைப் பிரிந்துவிட்டதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். சமீபத்தில் நிஹாரிகாவின் அண்ணன் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி நிச்சய விழாவிலும், ராம்சரண் குழந்தை பெயர் வைக்கும் விழாவிலும், பவன் கல்யாண் நடத்திய யாகம் ஒன்றிலும் அன்னா கலந்து கொள்ளவில்லை. அவர் தனது குழந்தைகளுடன் சொந்த நாட்டிற்கே திரும்பி விட்டதாகச் சொல்கிறார்கள்.