தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில், ரித்து வர்மா, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். சைன்ஸ் பிக்சன் கதை களத்தில் உருவான இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என கூறினார்கள். இந்த நிலையில் மார்க் ஆண்டனி தமிழ், தெலுங்கில் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் அறிவித்தனர். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு கடந்த சில மணி நேரங்களில் விஷால் மற்றும் மார்க் ஆண்டனி படக்குழுவினர்கள் விநாயகர் சம்மந்தப்பட்ட பாடல்களை பதிவிட்டு பில்டப் செய்து வந்தனர்.