பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா |

சென்னையில் பிறந்து இங்கு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின் தெலுங்கிலும் அறிமுகமாகி அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தவர் சமந்தா. ஐதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டாலும், அவ்வப்போது வந்து தமிழ்ப் படங்களிலும் நடித்துவிட்டுச் செல்வார்.
தசை அழற்சி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா பல மாதங்கள் ஓய்வெடுத்து சிகிச்சையில் இருந்தார். தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக 'குஷி' படத்திலும், ஹிந்தியில் 'சிட்டாடல்' என்ற இணையத் தொடரிலும் நடித்து வருகிறார். அவற்றின் படப்பிடிப்பு முடிந்ததும் ஓரிரு ஆண்டுகளுக்குப் புதிய படங்களில் அவர் நடிக்கப் போவதில்லையாம்.
தனது தசை அழற்சி நோய்க்கு மேலும் சிகிச்சை எடுத்து முழுமையாக உடல்நலம் தேறிய பின்னர் தான் நடிக்க வரப்போகிறார் என டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், நடிப்பதற்காக சில தயாரிப்பாளர்களிடம் வாங்கிய முன்பணத் தொகையையும் திருப்பித் தர முடிவெடுத்துள்ளாராம்.
இந்தத் தகவல்கள் குறித்து சமந்தா மறுப்பு தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சமீப காலமாக செய்திகள் வெளியாவதும் பின்னர் மறுப்புகள் வருவதும் இயல்பாகிவிட்டது.