இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல். முதல் பாகம் வெளியான பின்பு அவரும் 'பாகுபலி' நாயகன் பிரபாஸும் புதிய படம் ஒன்றில் இணைவதாக அறிவிக்கப்பட்டு 2020ம் ஆண்டிலேயே இந்த 'சலார்' படம் ஆரம்பமானது.
அதன் பின் 'கேஜிஎப் 2' படம் வந்து அது மாபெரும் வெற்றியையும், வசூலையும் பெற்ற பின் 'சலார்' படத்தின் மீது இன்னும் அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இன்று அதிகாலையில் அப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள்.
ஆயுதம் ஏந்திய சிலர் முன்பு டினு ஆனந்த், பிரபாஸ் பற்றி பில்டப் கொடுத்துப் பேசும் காட்சி மட்டுமே டீசரில் இடம் பெற்றுள்ளது. “எளிதான…ஆங்கிலத்தில்….'' என அவர் பேச ஆரம்பித்து, “எந்த குழப்பமும் வேண்டாம். யானை, சிறுத்தை, புலி எல்லாமே ரொம்ப ஆபத்தானவை… ஆனா.. ஜூராசிக் பார்க்ல இல்ல… ஏன்னா, அந்த பார்க்ல….அங்க ஒரு……..,” என சொல்லி முடித்ததும் ஆவேசமான பிரபாஸைக் காட்டும் காட்சியிலும், அடுத்து பிரித்விராஜைக் காட்டும் சில வினாடி காட்சியிலும் டீசர் முடிவுக்கு வருகிறது.
அதே கருப்பு நிற பின்னணி, ஆயுதம் ஏந்திய சர்வதேச ரவுடிகள் (?) என 'கேஜிஎப்' படத்தின் சாயல் இந்த டீசரிலும் நிறையவே பிரதிபலிக்கிறது. 'கேஜிஎப்' படத்தில் அந்த சுரங்கத்தில் இருந்த எதிரிகளை எதிர்த்து சண்டையிட்டார் கதாநாயகன். இந்த 'சலார்' படத்தில் சர்வதேச எதிரிகளுடன் கதாநாயகன் மோதுகிறாரோ என யூகம் வருகிறது.
இப்படத்தில் ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராஜ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, கருடா ராம் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். ரவி பர்சூர் இப்படத்திற்கு இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவு சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்கள்.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு 'சாஹோ, ராதேஷ்யாம், ஆதிபுருஷ்' என மூன்று பான் இந்தியா படங்களைக் கொடுத்தும் தோல்வியடைந்த பிரபாஸை இந்த 'சலார்' சறுக்கல் இல்லாமல் காப்பாற்றுவாரா என்பது செப்டம்பர் 28ம் தேதி தெரிய வரும். தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.