ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நடிகர் நாக சைதன்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த தேங்யூ, கஸ்டடி போன்ற திரைப்படங்கள் படுதோல்வி அடைந்தது. அடுத்து கார்த்திகேயா பட இயக்குனர் சேன்டோ மோன்டீடி இயக்கத்தில் நாக சைதன்யா புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குஜராத்தில் நடந்த ஒரு உண்மையான மீனவரின் காதல் கதையை மையப்படுத்தி பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த கதையில் இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதால் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு ‛தண்டல்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.