தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'காவாலா' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
அந்தப் பாடலில் தமன்னாவின் கவர்ச்சி நடனம் இருக்கலாம் என்று போஸ்டரைப் பார்த்ததும் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாகவே சமூக வலைத்தளங்களில் தமன்னா பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஓடிடி தளங்களில் வெளியான 'ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2' ஆகியவற்றில் தமன்னா கவர்ச்சிகரமாக நடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அவற்றின் சில வீடியோக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து கமென்ட் செய்து வந்தனர். இந்நிலையில் 'ஜெயிலர்' படப் பாடல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ரஜினிகாந்த் உள்ளிட்ட டாப் நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால் கவர்ச்சிப் பாடலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் ஒரு யூகம் உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் எப்படிப்பட்ட பாடல் என்பது தெரிந்துவிடும்.