தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபல நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் தமிழ் சினிமாவில் நலன் குமாரசாமியின் ஒரு பக்க கதை என்கிற படம் மூலமாக அறிமுகமானபோது அந்த படம் பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த சமயத்தில் அறிமுகப்படமே இப்படியாக வேண்டுமா என்கிற பச்சாதாபம் அவர் மீது இருந்தது. ஆனால் அடுத்து வந்த சில வருடங்களில் நிலைமை அப்படியே மாறி காளிதாஸ் தற்போது தமிழில் இயக்குனர்களால் விரும்பப்படும் நடிகராக மாறிவிட்டார். குறிப்பாக பாவக்கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்தில் நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றவர், விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்து கவனம் பெற்றார்.
அதை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். தற்போது இந்தியன்-2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் காளிதாஸ், அடுத்ததாக தனுஷின் ஐம்பதாவது படத்திலும் இடம் பிடித்துள்ளார். தனுஷ் தானே இயக்கி நடிக்கும் அவரது ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் இருந்தபடி பின்னணியில் தனுஷின் புதுப்பேட்டை பாடல் ஒலிக்கும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் காளிதாஸ் ஜெயராம்.