துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
இந்தியத் திரையுலகத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையை 'கேஜிஎப் 2' டீசர் தன் வசம் வைத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. 2021 ஜனவரி மாதம் வெளிவந்த அந்த டீசர் இதுவரையிலும் 271 மில்லியன் பார்வைகளைப் பெற்று இந்தியத் திரைப்பட டீசர்களில் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான 'ஆதிபுருஷ்' டீசர் 109 மில்லியன் பார்வைகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
'கேஜிஎப் 2' படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்து இயக்கியுள்ள 'சலார்' படத்தில் பிரபாஸ் நடிப்பதால் அந்த டீசருக்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்ற பெருமையை 'சலார்' டீசர் பெற்றது. தற்போது 105 மில்லியன் பார்வைகளுடன் உள்ள அந்த டீசர் விரைவில் 'ஆதிபுருஷ்' டீசரின் சாதனையான 109 மில்லியன் பார்வைகளைக் கடக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், 'கேஜிஎப் 2' டீசரின் சாதனையான 271 மில்லியன் சாதனையைக் கடக்குமா என்பது கேள்வியாக உள்ளது.
'கேஜிஎப் 2' டீசர் 200 மில்லியன் பார்வைகளைக் கடக்க ஐந்து மாதங்கள் ஆனது. 2021 ஜனவரியில் வெளியான டீசர் ஜுலை மாதத்தில்தான் அந்த சாதனையைப் புரிந்தது. அதற்கு ஐந்து மாத கால அவகாசம் தேவைப்பட்டது.
பிரசாந்த் நீல், பிரபாஸ் கூட்டணியில் வரும் படம் என்பதாலும், இருவருமே இதற்கு முந்தைய அவர்களது படங்களின் டீசர்களில் சாதனை புரிந்தவர்கள் என்பதாலும் 'சலார்' டீசரும் அந்த சாதனையைப் பெறும் என அவர்களது ரசிகர்கள் இன்னமும் எதிர்பார்க்கிறார்கள்.
'சலார்' படம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் விரைவில் 'சலார்' டிரைலரும் வெளியாக உள்ளது என்கிறார்கள். அதனால், 'கேஜிஎப் 2' டீசரின் சாதனையை முறியடிக்குமா என்பதும் சந்தேகம்தான்.