துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பாகுபலி படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ராணா. தொடர்ந்து ஹீரோவாக மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் அவர் வெப்சீரிஸ் பக்கமும் தனது கவனத்தை திருப்பி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரும் நடிகர் வெங்கடேஷும் இணைந்து நடித்த ராணா நாயுடு என்கிற வெப்சீரிஸ் வெளியானது. இந்த நிலையில் நடிகர் ராணா ஒரு தயாரிப்பாளராக மாறி 'மாயா பஜார் பார் சேல்' என்கிற வெப்சீரிஸை தயாரித்துள்ளார்.
கவுதமி சல்குல்லா என்பவர் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில் நடிகர்கள் நவ்தீப், நரேஷ், ஈஷா ரெப்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நகரின் முக்கியமான பகுதியில் உள்ள ஒரு புதிதாக கட்டப்பட்ட அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், திடீரென அரசாங்கம் அந்த அபார்ட்மெண்ட் முறையாக அனுமதியுடன் கட்டப்படவில்லை என கூறி அவற்றை அப்புறப்படுத்த முயற்சிப்பதால் அதிர்ச்சி அடைகின்றனர். இதற்காக அவர்கள் கையில் எடுக்கும் போராட்டம் தான் இந்த வெப் சீரிஸின் முழுக்கதை. வரும் ஜூலை 14-ம் தேதி முதல் ஓடிடி தளத்தில் இது ஒளிபரப்பாக இருக்கிறது.