தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் ஜூலை 14ம் தேதி ‛மாவீரன்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கியுள்ளார். அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ள இதில் மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் இந்த படம் வெளியாவதை முன்னிட்டு படத்தின் நிகழ்ச்சிகளை சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடத்தினர். இதைத் தொடர்ந்து கேரளாவிலும் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் மற்ற இடங்களைப் போல அல்லாமல் கொச்சியில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் மட்டுமே தனியாளாக நின்று இந்த படத்தை பிரமோட் செய்தார்.
அப்போது சிவகார்த்திகேயனிடம் நீங்கள் ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலிங் நடிப்பதாக செய்திகள் வெளியானதே. அது உண்மையா என்று கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், அதில் நடிக்கவில்லை என்றும் ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காக என்னை கூப்பிடவே இல்லையே என்றும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார் என்பதாலும் ஜெயிலர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது நடிகர் ரஜினிகாந்ததை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்த புகைப்படம் வெளியானதாலும் அவர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்பது போன்று ஒரு செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.