துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் படம் ‛லால் சலாம்'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் ரஜினி நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மொய்தீன் பாய் என்ற வேடத்தில் டானாக கிட்டத்தட்ட பாட்ஷா மாதிரியான கேரக்டரில் ரஜினி நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. இந்நிலையில் தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரஜினி நிறைவு செய்துள்ளார். இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி அவரை வழி அனுப்பி வைத்தனர்.