தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஏராளமான படங்களில் நடித்தவர் மயில்சாமி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் சிவராத்திரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு அன்பு, யுவன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நடித்து வரும் இவர்கள் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்ட நிலையில், அவர்களின் மனைவிகள் இருவருமே அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும், தற்போது இந்த பிரச்சனை மேலும் பெரிதாகி இருவரின் மனைவிகளும் பிரிந்து சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி நடிகர் அன்புவை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛சிரித்துக் கொண்டே... அந்த மாதிரி ஒரு பிரச்னையும் இல்லை. பைத்தியகாரத்தனமாக உள்ளது. இவர்களுக்கு வேற வேலையே இல்லை. ஏன் இவ்வளவு கேவலமாக யோசிக்கிறார்கள் என தெரியவில்லை'' என்றார்.
மயில்சாமியின் மூத்த மகன் அன்பு, திமுக துணை சபாநாயகர் பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.