டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23 ஆண்டுகளாகிறது. இதனை கொண்டாடும் வகையிலும், சங்கத்திற்கு நிதி திரட்டவும் 'சிடி 23' என்ற பெயரில் பிரமாண்ட நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். வருகிற 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: இந்த விழாவில் திரைப்படத்துறை மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பிரபல இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் இசையமைப்பாளர்கள், நடன கலைஞர்கள், சண்டை பயிற்சி கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், ஒப்பனை கலைஞர்கள், தையற் கலைஞர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த விழாவில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளை பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர் நடத்துகிறார். இசை நிகழ்ச்சிகளை பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா நடத்துகிறார். வீர விளையாட்டு நிகழ்ச்சிகளை சண்டை பயிற்சியாளர்கள் பாண்டியன் மாஸ்டர் மற்றும் தவசி மாஸ்டர் நடத்துகிறார்கள்.
நகைச்சுவை நிகழ்ச்சிகளை திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் நடத்துகின்றனர். தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்த திரைப்படம் மற்றும் சின்னத்திரை நட்சத்திர தம்பதிகள் பங்குபெற்று வித்தியாசமான நிகழ்ச்சி நடக்கிறது. திரைப்படம் மற்றும் சின்னத்திரை பிரபல இயக்குநர்கள் உருவாக்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த விழாவில் இடம் பெறுகிறது. பிரபல கலைஞர்கள் நடத்திக் காட்டும் பல குரல் நிகழ்ச்சிகளும் விழாவில் இடம் பெறும்.
திரைப்படத்துறை மற்றும் சின்னத்திரையில் சாதனைகள் நிகழ்த்திய சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.