திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ் சினிமா ஆகஸ்ட் மாதல் முதல் சில பல பெரிய படங்களின் வெளியீடுகள் வர உள்ளன. அதற்கடுத்த மாதங்களிலும் அது தொடரப் போகிறது. அதனால், இடையிடையே கிடைக்கும் வாரங்களில் தங்களது படங்களை வெளியிட சிறிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் தயாராகி வருகிறார்கள். பட வெளியீடுகளை சரிவர முறைப்படுத்தாத காரணத்தால் தியேட்டர்களைப் பெற அவர்கள் தள்ளாடி வருகிறார்கள். அதனால், ஒரே வாரத்தில் ஐந்தாறு படங்கள் வரை வெளியாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஜுலை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இந்த வாரம் ஜுலை 28ம் தேதி இதுவரை வெளிவந்த அறிவிப்புகளின்படி 7 படங்கள் வெளியாக உள்ளன. அவற்றில் முன்னான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தயாரிப்பில் வெளியாகும் முதல் படமான 'எல்ஜிஎம்', மற்றும் சந்தானம் நடித்துள்ள 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய இரண்டு படங்கள் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. இவற்றோடு பரத் நடித்துள்ள'லவ், டெரர், டைனோசர்ஸ், பீட்சா 3, அறமுடைத்த கொம்பு' ஆகிய படங்களும் வெளியாக உள்ளன.
இந்த 2023ம் வருடத்தில் சிறிய பட்ஜெட் படங்களின் பக்கம் ரசிகர்கள் அதிகம் திரும்பாத நிலையிலும், “அயோத்தி, டாடா, போர் தொழில், குட்நைட்” ஆகிய சில படங்கள் ரசிகர்களை தியேட்டர்கள் பக்கம் வரவைத்தன. அது போல இந்த வாரம் வெளியாகும் படங்கள் வரவைக்குமா என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.