'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா பதானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இப்படத்தின் வீடியோ முன்னோட்டம் ஒன்று சூர்யாவின் பிறந்தநாளான நேற்று வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, அசாமி, ஒரியா ஆகிய இந்திய மொழிகளிலும், சீனா, கொரியன் என சர்வதேச மொழிகளிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
முன்னோட்ட வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் 22 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. சூர்யா நடித்து இதுவரை வெளிவந்த படங்களின் முன்னோட்ட வீடியோக்களை விடவும் இது அதிகம். இதனால், படம் மீது ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. இந்த 'கங்குவா' படம் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திர காலப் படமாகவும், தற்போதைய காலப் படமாகவும் கலந்து உருவாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு வெளியான படங்களில் பான் இந்தியா அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களுமே தமிழைத் தவிர மற்ற மொழிகளில் வரவேற்பைப் பெறவில்லை. மற்ற மொழிகளுக்குமான வசூலும் மிகவும் குறைவாகவே இருந்தது. சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஏஆர் ரகுமான், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இருந்தும் அந்தப் படத்தின் நிலை அதுதான்.
'கங்குவா' படம் அடுத்த ஆண்டுதான் வெளிவர உள்ளது. இருந்தாலும் இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களைக் காட்டிலும் அதிக அளவிலான மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகப் போகிறது. பான் இந்தியா அளவில் இந்தப் படம் ஏதோவொரு தாக்கத்தையாவது ஏற்படுத்துமா என்பதற்கு நாம் நிறையவே பொறுமை காக்க வேண்டும்.