சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
எளிமைக்கும் நேர்மைக்கும் உதாரணமாக திகழ்ந்த கக்கனின் வாழ்க்கை இப்போது திரைப்படமாகியுள்ளது. இந்தப் படத்தில் கக்கனாக நடித்திருக்கும் ஜோசப் பேபி, படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியதுடன் தயாரித்தும் இருக்கிறார். 'என் காதலி சீன் போடுற, இரும்பு மனிதன்' ஆகிய தமிழ் படங்களையும் ஒரு சில கன்னட படங்களையும் தயாரித்தவர் ஜோசப் பேபி.
இந்த படத்தை பிரபு மாணிக்கம் என்பவர் இயக்கி வருகிறார். தேவா இசை அமைக்கும் இந்த படத்திற்கு வெங்கி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கக்கன் பிறந்த ஊரான தும்பைப்பட்டி என்ற ஊரிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை காலை 9.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பாடல்களை வெளியிடுகிறார். நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார். விழாவில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், திரையுலகினர், கக்கன் குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள்.