பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
1982ம் ஆண்டு 'படையோட்டம்' என்ற மலையாள படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரியதர்ஷன். இதுவரை இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் 96 படங்களை இயக்கி உள்ளார். தமிழில் சின்ன மணிக்குயிலே, கோபுர வாசலிலே, சிநேகிதியே, லேசா லேசா, நிமிர், சில நேரங்களில் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய தமிழ் படமான 'காஞ்சீவரம்' சிறந்த நடிகருக்கான விருதை பிரகாஷ்ராஜுக்கும், சிறந்த இயக்னருக்கான விருதை பிரியதர்ஷனுக்கும் பெற்றுத் தந்தது.
தற்போது 'அப்பத்தா' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உளளது. இந்த படம் குறித்து பேட்டியளித்துள்ள பிரியதர்ஷன் 100 படங்கள் இயக்கி விட்டு ஓய்வு பெறப்போவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது "ஒரு வயதான அப்பத்தாவுக்கும், ஒரு நாய்க்கும் இடையிலான அன்பின் மூலம் மனிதர்களுக்கும் விலங்கிற்குமான ஆத்மார்த்தமான அன்பை பேசுகிற படம். இதுவரை 96 படங்களை இயக்கிய நான் இன்னும் 4 படங்கள் இயக்கி விட்டு 100 படத்துடன் ஓய்வெடுக்க இருக்கிறேன்.
இன்றைய இளம் தலைமுறையினர் புதிய சிந்தனையோடு வருகிறார்கள். ஒடிடி தளங்களின் வருகையால் சிறு பட்ஜெட் படங்களுக்கு வாசல் திறக்கப்பட்டிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பெரிய நடிகர்களின் படங்கள் தியேட்டரில்தான் வெளியிடப்பட வேண்டும்" என்கிறார் பிரியதர்ஷன்.