மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மீசையை முறுக்கு நடிகர் ஆனந்த் இயக்கி, நடித்துள்ள படம் ‛நண்பன் ஒருவன் வந்த பிறகு'. இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானிஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.எச். காசிப் இசையமைத்துள்ள இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்கள் கடந்தும் வெளியாகவில்லை. தற்போது படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் வெங்கட்பிரபு நேற்று அடுத்து என பதிவிட்டு இன்று 11 மணிக்கு வெளியாகும் என குறிப்பிட்டு இருந்தார். இதனால் இது அடுத்து அவர் விஜய்யை வைத்து இயக்க உள்ள 68வது படத்தின் அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் வெளியிட்டது ‛நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை பற்றி தான். வெங்கட்பிரபு கிப்ட் என குறிப்பிட்டு இந்த படத்தின் புரொமோ வீடியோ வெளியிட்டார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்குவதாக தெரிகிறது. மேலும், கிடப்பில் இருந்த இப்படத்தை வெங்கட் பிரபு தனது ப்ளாக் டிக்கெட் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார் என கூறப்படுகிறது.