மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் - கமல் கூட்டணியில் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் 2 என்கிற பெயரில் துவங்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதிலும் கமலின் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் தான் பிரதானம் என்றாலும், இளமைக்கால கமலும் இந்த படத்தில் இருக்கிறார். அது மட்டுமல்ல இந்த படத்தில் கமல் சில நிமிடங்கள் வந்து போகும் விதமாக பெண் வேடத்திலும் நடித்துள்ளார் என்றும் ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கதைப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை காரணமாக கமல் அப்படி பெண் வேடம் போட வேண்டிய அவசியம் இருக்கிறதாம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை பல ஹீரோக்கள் பெயரளவிற்கு ஒரு காட்சியில் பெண் வேடத்தில் நடித்து வந்த நிலையில் அவ்வை சண்முகி படத்தில் முழு நீள கதாபாத்திரமாகவே பெண் வேடமிட்டு நடித்தார் கமல். அதைத் தொடர்ந்து தசாவதாரம் படத்தில் அவர் ஏற்று நடித்த பத்து வேடங்களிலும் வயதான பாட்டி கதாபாத்திரமும் ஒன்று. அதிலும் அவர் வெகு சிறப்பாக நடித்திருந்தார். இந்த நிலையில் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் பெண் வேடமிட்டு நடிக்கிறார் என்பது ஒரு ஸ்பெஷல் செய்திதான்.