தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
90களில் முன்னணி நடிகையாகவும், கனவு கன்னியாகவும் இருந்த குஷ்பு தற்போது அரசியல்வாதி. தற்போது பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருக்கிறார். அதோடு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருக்கிறார். எந்த கட்சியில் இருந்தாலும் தன் மனதில் பட்டதை சமூக வலைத்தளங்களின் மூலம் பளிச்சென்று பேசக்கூடியவர். இதனால் அவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்பவர்கள் லட்சக் கணக்கில் உள்ளனர்.
இந்த நிலையில் குஷ்பு சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கிறார். இதுகுறித்து அவர் கடைசியாக வெளியிட்டுள்ள பதிவில் "எனக்கு கொஞ்சம் கட்டாய ஓய்வு தேவை என்பதால், சமூக வலைத்தள ரேடாரில் இருந்து சற்று விலகி இருக்கிறேன். விரைவில் இணைகிறேன். அதுவரை கவனமாக இருங்கள். நன்றாக இருங்கள். பாசிட்டிவ்வாக இருங்கள். அனைவரையும் நேசிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
குஷ்பு வருகிற பார்லிமென்ட் தேர்தலில் தென் சென்னை அல்லது திருச்சி தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதற்கான பணிகளை முடுக்கி விடவும், அரசியலில் கூடுதல் கவனம் செலுத்தவும் அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.