துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், தமன்னா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், “ஜெயிலர்' ஆடியோ இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் அவர்கள், அனைவரும் திரையரங்குக்கு வந்து படம் பாருங்கள் என்று பேசியுள்ளார். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர் படம் திரையிட ஆவலாக உள்ளனர். அதனால், சூப்பர் ஸ்டார் அவர்கள் தமிழகத்தில் உள்ள எல்லா திரையரங்குகளிலும் ஜெயிலர் படத்தை திரையிட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.