துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தேசிய குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் குத்துசண்டை வீராங்கனையாகவே நடித்தார். ஒரு படத்துடன் விலகி மீண்டும் குத்துச் சண்டைக்கு செல்ல தீர்மானித்த அவரை இறுதிசுற்று படத்தின் வெற்றி நிரந்தர நடிகை ஆக்கியது.
தொடர்ந்து விஜய் சேதுபதி ஜோடியாக 'ஆண்டவன் கட்டளை', ராகவா லாரன்ஸ் ஜோடியாக 'சிவலிங்கா', அசோக் செல்வன் ஜோடியாக'ஓ மை கடவுளே', சமீபத்தில் 'கொலை' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தநிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் 'கிங் ஆப் கோதா' படத்தில் ஒரு பாடலுக்கு ரித்திகா சிங் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். கவர்ச்சி உடையில், ரித்திகா சிங் கிளாமராக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த படத்தில் துல்கர் சல்மானுடன் ஐஸ்வர்யா லட்சுமி, சபீர், பிரசன்னா, அனிகா சுரேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். அபிலாஷ் ஜோஸ்லே இயக்கியுள்ளார்.