மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
'பருத்திவீரன்' படத்தில் அறிமுகமான கார்த்தி, தற்போது தனது 25வது படமான ஜப்பானில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்தி நடித்து வரும் படங்கள், நடிக்க இருக்கும் படங்கள் பற்றிய அப்டேட்டை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நடிகர் கார்த்தி தற்போது மூன்று டங்களில் இரவு பகலாக உழைத்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இயக்குநர் ராஜு முருகன், இயக்கி வருகிறார். அடுத்து நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பில் ஆகஸ்ட் மாதம் கார்த்தி கலந்து கொள்ளவிருக்கிறார்.
கார்த்தியின் 27வது படத்தை பிரேம் குமார் இயக்குகிறார். அரவிந்த்சாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கார்த்தியின் படங்கள் வெளியீட்டுக்கு முன்னரே 150 கோடி ரூபாய் வசூலிக்கும் நிலையை அடைந்திருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.