துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
யோகி வீர் பிக்சர்ஸ் சார்பில் பி.ராம் தயாரிக்கும் படம் 'துடிக்கிறது மீசை'. எம்.ஜே.இளன் என்ற புதுமுகம் இயக்குகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக யோகிதா, வர்ஷினி, அக்ஷியா அறிமுகமாகிறார்கள். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் இளன் கூறியதாவது: காதல் தவறில்லை. ஆனால்,காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை வீணடிப்பதைத் தவறு என்று சொல்கிற கதை இது. காதலுடன் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. காதலில் விழுந்து தன்னை அழித்துக் கொள்ளும் இளைஞர்களைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது. இக்கதை மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது. இந்தக் கதையை இக்காலத்திற்கு ஏற்ற வகையில் நாங்கள் காதல், நகைச்சுவை கலந்து சுவாரசியமாகக் கூறவிருக்கிறோம்.
தற்போது புதுமையான திரைக்கதை உள்ள படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. இது ஒரு நல்ல ஆரோக்கியமான, என்னைப் போன்ற புதியவர்களுக்கு நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் மூலம் புகழ் பெற்ற வசனமான "துடிக்கிறது மீசை " என்பதையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளோம். இத்தலைப்பு கோபத்தைக் குறியீடாகச் சொல்கிறது. என்கிறார் இயக்குனர் இளன்.