பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
டைம் மிஷின் கான்செப்ட்டை மையப்படுத்தி இன்று நேற்று நாளை என்கிற பேண்டஸி படத்தை இயக்கியவர் இயக்குனர் ரவிக்குமார். அதை தொடர்ந்து அதேபோல விண்வெளியை மையப்படுத்தி இன்னொரு பேண்டஸி படமாக அயலான் என்கிற படத்தை நீண்ட நாட்களாக இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் கடந்த 2021லயே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா தாக்கம் உள்ளிட்ட சில தடைகளால் இந்த படத்தின் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படம் தீபாவளி ரிலீஸாக வெளியாக இருக்கிறது என்று அறிவிப்பு வெளியானது. அதற்கேற்றார் போல் பணிகளும் வேகமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இந்த படம் தீபாவளிக்கு திட்டமிட்டபடி வெளியாவது சந்தேகம் தான் என ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது.
இந்த படத்தில் கிராபிக்ஸ் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.. கிராபிக்ஸ் பணிகள் முடிந்துவிட்டாலும் பல இடங்களில் அவை தயாரிப்பு தரப்பிற்கு பெரிய அளவில் திருப்தியை தரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் குறைகளை நீக்கி அவற்றை சரி செய்து முடிப்பதற்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவை என்பதால் தீபாவளிக்கு இந்த படம் வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாம். இதைத் தாண்டி படக்குழுவினர் இந்த பிரச்சனையை சமாளித்து திட்டமிட்டபடி படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வார்களா என்பது வரும் நாட்களில் தான் தெரியும்.