தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிகா, மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛மாவீரன்'. 25 நாட்களை கடந்து இந்தப்படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை ரஜினி பார்த்து சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினரை போனில் அழைத்து பாராட்டி உள்ளார். இதற்காக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‛‛மாவீரன் படம் 25 நாட்களை கடந்துள்ளது. இதற்கு காரணமான ரசிகர்கள், மக்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினி எனக்கு போனில் அழைத்து பாராட்டினார். எங்கள் படக்குழுவிற்கே சிறப்பான ஒரு தருணம். எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் இது. ஜெயிலர் பட வேலைகளுக்கு மத்தியில் எங்கள் படத்தை பார்த்து பாராட்டி, எல்லாருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‛தலைவா யூ ஆர் ஆல்வேஸ் கிரேட்'. உங்களின் மிகப்பெரிய ரசிகன் நான். எத்தனை முறை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நான் சொல்லுவேன். உங்களைப் பார்த்து சினிமாவுக்கு வந்தவன், உங்களுக்கு பேனர் வைத்து கொண்டாடியவன். அப்படிப்பட்ட எனக்கு என் படத்தை பார்த்துவிட்டு நீங்கள் வாழ்த்துவது என் வாழ்நாள் சாதனையே. நாளைக்கு(ஆக., 10) எல்லோருக்கும் ரொம்ப சிறப்பான நாள். காரணம் ஜெயிலர் ரிலீஸ். தலைவா உங்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம். உங்களை என்றென்றும் நாங்கள் கொண்டாடுவோம். லவ் யூ தலைவா. ஒட்டுமொத்த ஜெயிலர் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். இந்தபடம் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.