ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் |
பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தமிழ் படங்களின் மீது தனிப் பிரியம் கொண்டவர். தமிழில் நல்ல படங்கள் வரும்போது தனது பாராட்டுகளை தவறாமல் தெரிவித்து வருபவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் என்கிற படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானார்.
இந்த நிலையில் தற்போது அவர் மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ. இந்த படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்த விதம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார் அனுராக் காஷ்யப்.
“இதற்கு முன்னதாக விக்ரம் படத்தை பார்த்துவிட்டு மீடியாக்களில் ஒரு முறை பேசும்போது லோகேஷ் கனகராஜின் யுனிவர்சில் நானும் இணைந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியிருந்தேன். ஒருநாள் லோகேஷ் கனகராஜ் என்னை அழைத்து வாங்க சார்.. உங்களுக்காக இதில் ஸ்பெசலாக ஒன்றை எழுதியுள்ளேன் என லியோ படத்தில் என்னை இணைத்துக் கொண்டார்” என்று கூறியுள்ளார்.