ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க கடந்த வாரம் வெளியான படம் 'ஜெயிலர்'. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கில் எதிர்பார்த்ததை விடவும் இப்படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'போலா ஷங்கர்' இப்படத்திற்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 'போலா ஷங்கர்' படுதோல்வியடைந்துள்ளது. அதனால், 'ஜெயிலர்' படத்திற்கு கூடுதல் தியேட்டர்களும், ரசிகர்களின் வருகையும் கிடைத்து வருகிறது.
கடந்த நான்கு நாட்களில் இப்படம் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டும் 32 கோடி வசூலைப் பெற்றுள்ளது என்பதை அங்கு படத்தை வெளியிட்ட ஏசியன் சினிமாஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலக அளவில் கடந்த நான்கு நாட்களில் இப்படம் 300 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். மற்ற வினியோகஸ்தர்கள் வசூல் தொகையை அறிவித்து வரும் நிலையில் படத்தைத் தயாரித்தவர்கள் இதுவரையிலும் வசூல் பற்றி அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.