துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ராஞ்சி : ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு இமயமலை சென்றார். பெங்களூருவில் இருந்து நண்பர்களுடன் இமயமலை பயணத்தை துவக்கிய அவர், முதலில் ரிஷிகேஷ், பத்ரிநாத்தில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இமயமலை ஒட்டியள்ள ஆன்மிக தலங்களுக்கு நடைபயணமாக சென்ற அவர், பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்தார்.
இந்த பயணத்தை முடித்துக்கொண்டு ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு நேற்று(ஆக.,16) ரஜினி சென்றார். ராஜ்பவனில், அம்மாநில கவர்னரான தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், நமது ஜார்கண்ட் மாநிலத்திற்கு வந்த , எனது அன்பு நண்பரும், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரும், மிகச் சிறந்த மனிதருமான ரஜினிகாந்தை ராஜ் பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஜார்க்கண்டின் மாபெரும் மண்ணிற்கு வந்த அவரை வரவேற்றேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.