தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'லியோ'. இந்தப் படத்திலும் போதைப் பொருள் கடத்தலைத்தான் கதையாக வைத்திருப்பார் லோகேஷ் என படத்திற்காக வெளியான வீடியோக்கள் மூலம் புரிகிறது.
இப்படத்தில் நடிக்கும் அர்ஜூன் நேற்று முன்தினம் பிறந்தநாளைக் கொண்டாடினார். அதை முன்னிட்டு அர்ஜூனின் கதாபாத்திரமான 'ஹரால்டு தாஸ்' அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த வீடியோவில் அர்ஜூன் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது சமூக ஆர்வலர்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து புகைபிடிக்கும் புகைப்படங்கள், பாடல், வீடியோக்களை படக்குழுவினர் வெளியிடுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதற்கு முன்பு சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அவரது கதாபாத்திர 'ஆண்டனி தாஸ்' அறிமுக வீடியோவில் கூட சஞ்சய் தத் புகை பிடிக்கும் காட்சிதான் இடம் பெற்றிருந்தது. அதற்கும் முன்பாக வெளியான படத்தின் முதல் சிங்கிளான 'நான் ரெடிதான்' பாடலில் புகை பிடிப்பது, போதைப்பொருள், குடி ஆகியவற்றைப் பற்றிய வரிகள் இடம் பெற்றது எதிர்ப்புகளை சம்பாதித்தது. அதன் பிறகே அதில் எச்சரிக்கை வாசகங்களைச் சேர்த்தனர்.
எந்தவிதமான சமூக பொறுப்பும் இல்லாமல் தொடர்ந்து வீடியோக்களில் இப்படி புகைபிடிப்பதை ஊக்குவிக்கும் காட்சிகள் இடம் பெறுவது 'லியோ' படம் மீதான அச்சத்தை ரசிகர்களிடமும் ஏற்படுத்தியுள்ளது.
விஜய் புகைபிடிப்பது பற்றிய காட்சிகள் வெளியான போது எதிர்ப்புகளைத் தெரிவித்த சில அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போது தொடர்ந்து வரும் அது போன்ற வீடியோக்களை கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.