ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் அந்த படம் திரைக்கு வந்தபோது லெக்சஸ் என்ற ஒரு காரை அவருக்கு பரிசாக வழங்கினார் கமல். அந்த காரின் மதிப்பு 80 லட்சம் ரூபாய் ஆகும். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், தற்போது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கி இருக்கிறார். இந்த காரின் மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும். இந்த கார் 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.4 வினாடிகளில் கடந்து விடும். ஸ்மார்ட்போன் வசதியுடன் அன்லாக் செய்யவும் ஸ்டார்ட் பண்ணவும் முடியுமாம். அதோடு இந்த கார் ஒரு லிட்டருக்கு 12 முதல் 13 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.