தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் திரையுலகின் நட்சத்திர தொகுப்பாளராக இருப்பவர் ஆர்ஜே.விஜய். திரைப்பட விழாக்கள், நட்சத்திர விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். சின்னத்திரை சேனல்களிலும் தொகுப்பாளராக இருக்கிறார். அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'வேற மாறி ஆபீஸ்' என்ற வெப் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொடர் குறித்த அறிமுக விழாவில் கலந்து கொண்ட ஆர்ஜே.விஜய் பேசியதாவது: இந்த தொடரின் அணியே மிகவும் கற்பனை நயம் வாய்ந்த அணி. படப்பிடிப்பு தளத்தில் என்னோடு நடித்த சக நடிகர்கள் எப்படி நடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இங்கு மேடையில் எல்லாரும் சிறப்பாக நடிக்கிறார்கள். என்னை இந்த தொடருக்கு தேர்வு செய்யும் போது நீங்கள் தான் முக்கியமான கதாபாத்திரம், உங்களை வைத்துத் தான் மொத்த கதையும் நகர்கிறது என்று சொன்னார்கள். இப்படித்தான் எல்லோரிடமும் சொல்லியிருக்கிறார்கள் என்பது பின்னர்தான் தெரிந்தது.
இந்த தொடரில் நடித்ததன் மூலம் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். நானும் ஐ.டி துறையில் சில ஆண்டுகள் வேலை செய்தவன் என்பதால் இந்தக் கதையை என் வாழ்வோடு பொருத்திப் பார்க்க முடிந்தது. இவ்வாறு விஜய் பேசினார். இந்த தொடரில் விஜய்யுடன் விஷ்ணு விஜய், விக்கல்ஸ் விக்ரம், வி.ஜே.பார்வதி, ஷியாமா, லாவண்யா, வி.ஜே.பப்பு, சவுந்தர்யா நஞ்சுண்டன், கண்ணதாசன், சஞ்சீவ் ஆகியோர் நடித்துள்ளனர். சிதம்பரம் மணிவண்ணன் இயக்கி உள்ளார். சிவகாந்த் தயாரித்துள்ளார்.