தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
சூர்யா தயாரித்து, நடித்த படம் 'ஜெய் பீம்'. த.செ.ஞானவேல் இயக்கிய இந்தப் படம் இருளர்களின் வாழ்க்கையை பற்றி பேசியது. போலீஸ் லாக் அப்பில் இறந்த இருளர் சமூக இளைஞனின் மனைவிக்கு நீதி பெற்றுத் தந்த ஒரு நீதிபதியின் கதையாக இது அமைந்தது.
இந்த படம் கடந்த 2021ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் குறவர் சமுதாயத்தை இழிவுபடுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்து, நடித்த சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறவர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் புகாரில் முகாந்திரம் இல்லை என கூறி போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டனர்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் குறவர் நல்வாழ்வு சங்கத்தின் நிர்வாகி முருகேசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகேசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. முருகேசனின் மனுவுக்கு சென்னை போலீஸ் கமிஷனர், நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.