தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா மற்றும் பலர் நடிக்க ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த படம் 'ஜெயிலர்'. இப்படம் 525 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இப்படத்தைப் பொறுத்தவரையில் உலகம் முழுவதும் சுமார் 125 கோடிக்கு வியாபாரம் நடந்ததாக படம் வெளிவருவதற்கு முன்பே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவித்தார்கள். தமிழக உரிமையாக 62 கோடி, தெலுங்கு உரிமையாக 12 கோடி, கர்நாடக உரிமையாக 10 கோடி, கேரளா உரிமையாக 6 கோடி, இதர மாநிலங்களில் 4 கோடி, வெளிநாடுகளில் 31 கோடி என மொத்தமாக 125 கோடிக்கு விற்பனையானது.
இப்போது 525 கோடி வரை வசூலித்துள்ளது. இந்த வசூலில் தமிழகத்தில் மட்டும் 150 கோடி, தெலுங்கில் 73 கோடி, கர்நாடகாவில் 63 கோடி, கேரளாவில் 49 கோடி, இதர மாநிலங்களில் 10 கோடி, வெளிநாடுகளில் 180 கோடி வசூலாகியிருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இந்த வார இறுதி நாளான இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கான முன்பதிவு சிறப்பாக உள்ளது என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் வரையிலும் இந்தப் படத்திற்கான வரவேற்பு குறைய வாய்ப்பில்லை. எனவே, எப்படியும் 600 கோடி ரூபாய் வசூலைக் கடக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.