வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன்(52) உடல்நலக் குறைவால் மதுரையில் காலமானார்.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் வடிவேலு. சமீபத்தில் இவரது நடிப்பில் ‛மாமன்னன்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்து ‛சந்திரமுகி 2' படம் வெளியாக உள்ளது. இவரது சகோதரரான தம்பி ஜெகதீஸ்ரவன், ‛மலைக்கோவில் தீபம், காதல் அழிவதில்லை' உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த இவர் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று காலை(ஆக., 28) காலமானார்.
ஜெகதீஸ்வரன் உடல் அஞ்சலிக்காக மதுரை, ஐராவதநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கில் வடிவேலுவும் பங்கேற்கிறார்.
கடந்த ஜனவரியில் தான் வடிவேலுவின் தாயார் சரோஜினி வயது மூப்பால் காலமானார். இப்போது அவரது தம்பி காலமானார். ஒரு ஆண்டிற்குள் வடிவேலு குடும்பத்தில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்திருப்பது வடிவேலு மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.