தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பெங்களூரு : பெங்களூரு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தான் வேலை பார்த்த அரசு போக்குவரத்து கழக பஸ் டிப்போவிற்கு சென்று தனது மலரும் நினைவுகளை நினைத்து பரவசமானார்.
ஜெயிலர் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள ரஜினி, அடுத்து தனது 170வது படமாக ‛ஜெய் பீம்' படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க போகிறார். சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சத்தமின்றி நடந்தது. செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

சமீபத்தில் தான் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுபயணம் சென்றுவிட்டு திரும்பினார் ரஜினி. இன்று(ஆக., 29) திடீரென பெங்களூரு சென்றார் ரஜினி. அங்குள்ள ராகவேந்திரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் பிஎம்டிசி எனப்படும் பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு திடீரென விசிட் அடித்தார். அங்குள்ள போக்குவரத்து ஊழியர்களிடம் கலந்துரையாடினார். ரஜினி உடன் போக்குவரத்து ஊழியர்கள் போட்டோ, வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். அவர்களுடன் குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டார் ரஜினி. இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.

ரஜினி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் தான் கன்டெக்ட்டராக வேலை பார்த்து வந்தார். பழசை மறக்காத ரஜினி அந்த ஞாபகத்தின் அடையாளமாய் இன்று அங்கு சென்று தனது மலரும் நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டார்.