நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு மற்றும் பலர் நடித்து செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள ஹிந்திப் படம் 'ஜவான்'. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய ஒரு விழாவை சென்னையில் நடத்த ஆசைப்பட்டார் படத்தின் இயக்குனர் அட்லீ. அவருடைய ஆசையை பெரிய மனதுடன் நிறைவேற்றினார் படத்தின் தயாரிப்பாளருமான ஷாரூக்கான்.
ஆனால், நேற்று நடைபெற்ற விழாவில் சிலர் பேசும் போது யதேச்சையாக 'லியோ' எனக் குறிப்பிட்டுப் பேசினர். அப்போது அரங்கில் இருந்த ரசிகர்களின் ஆரவாரம் அடங்க நீண்ட நேரம் ஆனது. குறிப்பாக பிரியாமணி பேசும் போது ரசிகர்கள் அவர்களது ஆரவாரத்தை நிறுத்தவேயில்லை. அனிருத் பேசும் போதும் 'லியோ அப்டேட்' எனக் கத்தினார்கள். அடுத்து அதுதான் எனப் பேசிவிட்டுச் சென்றார் அனிருத்.
தனது 'ஜவான்' படத்திற்கான புரமோஷனுக்காக மும்பையில் இருந்து வந்த ஷாரூக்கான் 'லியோ' படத்திற்கு இப்படி ஒரு இலவச புரமோஷன் கிடைத்ததைப் பார்த்து கொஞ்சம் அமைதியாகவே இருந்தார். இப்படத்தில் விஜய்யும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்கிறார்கள்.
விழாவுக்கு வந்திருந்த கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆரம்பம் முதலே ஆர்ப்பரிப்புடன் இருக்க முதலில் பேச வந்த படத்தின் எடிட்டர் ரூபன் எதையெதையோ பேசி நீண்ட நேரம் இழுத்து பொறுமையை சோதித்து நிகழ்ச்சியின் வேகத்தைக் குறைத்துவிட்டார். படத்தையும் அப்படி இழுஇழுவென இழுத்திருக்க மாட்டார் என்று நம்புவோமாக.