வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தில் நேற்று ஒரு பிரச்னை ஏற்பட்டது. சங்கத்தின் தலைவரான நடன இயக்குனர் மற்றும் நடிகர் தினேஷ் பதவி விலக வேண்டும் என நடனக் கலைஞர்கள், நடன இயக்குனர்கள். துணைத் தலைவர் நடன இயக்குனர் கல்யாண் தலைமையில் நேற்று சென்னை, தி நகரில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தில் தினேஷ் நடன இயக்கம் செய்த பாடலுக்கு நடனமாடிய நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என்றும், அதில் 35 லட்ச ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், கனடாவில் வசிக்கும் நடன இயக்குனர் கவுரி சங்கர் என்பவரை தினேஷ் தாக்கியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
தினேஷ் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை நேற்று வலுத்தது. இதனால் அங்கு சண்டை நடக்கும் சூழல் உருவாகவே காவல்துறையினர் தலையிட்டனர்.
'லியோ' படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே இந்த சம்பள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், அதை தீர்த்து வைத்துவிட்டதாகச் சொன்னார்கள். படம் வெளிவந்து ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நடன இயக்குனர்கள் சங்க சண்டையில் அந்த விவகாரம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் படத்தின் நாயகன் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் தலையிட்டு தீர்த்து வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.