கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா |
புதுடில்லி : இந்திய திரைப்படங்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2023ம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு டில்லியில் வெளியிடப்பட்டது. அதில் சிறந்த தமிழ் படமாக ‛பார்க்கிங்' தேர்வாகி உள்ளது. சிறந்த நடிகர்களாக ஷாரூக்கான், விக்ராந்த் மாஸே மற்றும் சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்வாகி உள்ளார். சிறந்த படமாக ‛12த் பெயில்' தேர்வாகி உள்ளது. சிறந்த இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் தேர்வாகி உள்ளார்
3 விருதுகளை அள்ளிய பார்க்கிங்
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான ‛பார்க்கிங்' படம் மூன்று தேசிய விருதுகளை அள்ளியது. சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகர்(எம்எஸ் பாஸ்கர்), சிறந்த திரைக்கதை (ராம்குமார் பாலகிருஷ்ணன்) ஆகிய பிரிவுகளில் விருது வென்றுள்ளது.
ஜிவி பிரகாஷிற்கு 2வது தேசிய விருது
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிற்கு 2வது முறையாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‛வாத்தி' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இதற்கு முன் சூர்யாவின் ‛சூரரைப்போற்று' படத்திற்காகவும் தேசிய விருது வென்றார்.
ஷாரூக், ராணி முகர்ஜி, ஊர்வசி, எம்எஸ் பாஸ்கருக்கு தேசிய விருது
சிறந்த நடிகருக்கான தேசிய விருது இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியான ஹிந்தி படமான ஜவான் படத்தில் நடித்ததற்காக ஷாரூக்கானுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் மற்றொரு ஹிந்தி படமான 12த் பெயில்-க்காக அதில் நடித்த விக்ராந்த் மாஸேவிற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேப்போல் சிறந்த நடிகைக்கான தேசிய விருது, ‛மிசஸ் சாட்டர்ஜி வெசஸ் நார்வே' என்ற படத்திற்காக ராணி முகர்ஜிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. துணை நடிகைக்கான விருது நடிகை ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு படத்திற்காக இந்த விருது அவருக்கு கிடைக்கிறது. பார்க்கிங் படத்திற்காக துணை நடிகருக்கான விருதை எம்எஸ் பாஸ்கர் தேர்வாகி உள்ளார்.
மொழி வாரியாக விருது வென்ற படங்கள்...
* சிறந்த தமிழ் படம் : பார்க்கிங்
* சிறந்த தெலுங்கு படம் : பகவந்த் கேசரி
* சிறந்த ஒடியா படம் : புஷ்கரா
* சிறந்த மராத்திய படம் : ஷியாமச்சி ஆய்
* சிறந்த மலையாள படம் : உள்ளொழுக்கு
* சிறந்த கன்னட படம் : தி ரே ஆப் ஹோப்
* சிறந்த ஹிந்தி படம் : ஏ ஜாக் ப்ரூட் மிஸ்டிரி
* சிறந்த குஜராத்தி படம் : வாஷ்
* சிறந்த பெங்காலி படம் : டீப் பிரிட்ஜ்
* சிறந்த அசாமி படம் : ராங்காதபு
தேசிய விருது விபரம்...
* சிறந்த படம் : 12த் பெயில்(ஹிந்தி)
* சிறந்த சமூக படம் : சாம் பகதுர்(ஹிந்தி)
* சிறந்த நடிகை : ராணி முகர்ஜி (மிசஸ் சாட்டர்ஜி வெசஸ் நார்வே, ஹிந்தி)
* சிறந்த நடிகர் : ஷாரூக்கான் (ஜவான், ஹிந்தி), விக்ராந்த் மாஸே(12த் பெயில், ஹிந்தி)
* சிறந்த இயக்குனர் : சுதிப்ஷோ சென் (தி கேரளா ஸ்டோரி, ஹிந்தி)
* சிறந்த இசையமைப்பாளர் : ஜிவி பிரகாஷ் குமார் (வாத்தி, படம்)
* சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : ஹர்தவர்தன் ரமேஷ்வர் (அனிமல், ஹிந்தி)
* சிறந்த துணை நடிகை : ஊர்வசி (உள்ளொழுக்கு, மலையாளம்), ஜானகி போதிவாலா (வாஷ், குஜராத்தி)
* சிறந்த துணை நடிகர் : எம்எஸ் பாஸ்கர் (பார்க்கிங், தமிழ்), விஜயராகவன்(பூக்காலம், மலையாளம்)
* சிறந்த ஆக் ஷன் இயக்குனர் : நந்து மற்றும் பிருத்வி (ஹனுமன் படம், தெலுங்கு)
* சிறந்த மேக்கப் : ஸ்ரீகாந்த் தேசாய் (சாம் பகதூர், ஹிந்தி)
* சிறந்த ஆடை வடிவமைப்பு : சச்சின் லாவ்லேகர், திவ்யா காம்பிர் மற்றும் நித்தி காம்பிர் (சாம் பகதூர், ஹிந்தி)
* சிறந்த எடிட்டிங் : மிதுன் முரளி (பூக்காலம், மலையாளம்)
* சிறந்த சவுண்ட் டிசைன் : சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் முரளிதரன் (அனிமல், ஹிந்தி)
* சிறந்த திரைக்கதை : ராம்குமார் பாலகிருஷ்ணன்(பார்கிங்), சாய் ராஜேஷ் நீலம் (பேபி, தெலுங்கு)
* சிறந்த வசனம் : தீபக் கிங்ராணி (சிர்ப் ஏக் பாண்டா காபி ஹே, ஹிந்தி)
* சிறந்த ஒளிப்பதிவு : பிரசாந்தனு மொகபாட்ரா (தி கேரளா ஸ்டோரி, ஹிந்தி)
* சிறந்த பின்னணி பாடகி : ஷில்பா ராவ் (சல்லயா... (ஜவான், ஹிந்தி)
* சிறந்த பின்னணி பாடகர் : பிவிஎன் எஸ் ரோகித் (பேபி... தெலுங்கு)
* சிறந்த குழந்தை நட்சத்திரம் : சுக்ருதி வெனி, கபீர் கந்தாரே, ட்ரிஷா தோசர், ஸ்ரீனிவாஸ் போகாலே மற்றும் பார்கவ்
சிறந்த படம் (அனிமேஷன், விஷூவல் எபக்ட்ஸ்) : ஹனுமன், தெலுங்கு
சிறந்த குழந்தைகள் படம் : நாள் 2 (மாரத்தி)
சிறந்த பொழுதுபோக்கு படம் : அவுர் ராணி கி பிரேம் கஹானி (ஹிந்தி)
சிறந்த அறிமுக இயக்குனர் படம் : ஆத்மாபாபலேட்(மராத்தி), ஆஷிஷ் பென்டே
‛லிட்டில் விங்ஸ்' படத்திற்கு விருது
Non feature film பிரிவில் தமிழ் ஆவணப்படமான ‛லிட்டில் விங்ஸ்' சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது, சரவண மருது சவுந்திரப்பாண்டி, மீனாட்சி சோமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 'தி டைம்லெஸ் தமிழ்நாடு' என்ற ஆங்கிலப்படத்துக்கு சிறந்த கலை கலாசார படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.