சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. சுனில், ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதை களத்தில் டைம் மிஷன் மையப்படுத்தி பேண்டஸி படமாக உருவாகியுள்ளது. மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 15ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் நாளை செப்டம்பர் 3ம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.