படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்ற நடிகராக உயர்ந்தார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். கடந்த எட்டு வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் எதுவுமே திட்டமிட்டபடி வெளியாகவில்லை. 'பாகுபலி 2' படத்திலிருந்தே வெளியீட்டுத் தேதிகள் சில பல காரணங்களால் தள்ளிப் போய் வருகின்றன.
'பாகுபலி 2' படத்தை முதலில் 2016ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். பின் நவம்பர் மாதத்திற்குத் தள்ளி வைத்து கடைசியாக 2017 ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட்டார்கள். அப்படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்த 'சாஹோ' படத்தை 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டு பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிட்டார்கள்.

பிரபாஸ் நடித்து 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்த படம் 'ராதே ஷ்யாம்'. ஆனால், படத்தை மார்ச் மாதம் தான் வெளியிட்டார்கள். அதற்கடுத்து பிரபாஸ் நடித்து இந்த ஆண்டு ஜுன் மாதம் வெளியான படம் 'ஆதி புருஷ்'. இப்படத்தை முதலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டு அதன் பின் வேறு சில தேதிகளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டு கடைசியாக வெளியானது.
இப்போது பிரபாஸ் நடித்து வரும் 'சலார்' படத்தை செப்டம்பர் 28ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து படத்தைத் தள்ளி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் நவம்பர் 24ம் தேதி வெளியாகலாம் எனத் தெரிகிறது.