தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மோனிஷா. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு சின்னத்திரை வந்தவருக்கு அந்த கனவும் நனவாகி மாவீரன் படத்திலும் நடிகையாக அறிமுகமாகிவிட்டார். அதுமட்டுமில்லாமல் தனது கல்லூரி படிப்பிலும் கோல்டு மெடல் வாங்கி அண்மையில் பாராட்டுகளை பெற்றார்.
இந்நிலையில், மோனிஷா உழைந்து சம்பாதித்த தனது சொந்த பணத்தில் புதிதாக கார் ஒன்றை வாங்கி அசத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர், 'நடுத்தர குடும்பத்து பெண்ணான எனக்கு கார் வாங்குவது எல்லாம் பெரிய விஷயம். புதிய கார் வாங்குவது எப்போதும் கனவாகவே இருந்தது. இப்போது அது நடந்துவிட்டது' என குறிப்பிட்டு கார் வாங்கிய மகிழ்ச்சியான தருணத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். மோனிஷாவின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த முதல் வெற்றி இது என்பதால் ரசிகர்கள் அவர் மேன்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.