எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை |
'காட்பாதர்' படத்தின் மூலம் உலக புகழ்பெற்றவர் அல் பாசினோ. ஸ்கேர் பேஸ், சென்ட் ஆப் எ உமன், ஹீட், ஐரிஷ் மேன் உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். அவருக்கென்று தனி ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.
அல் பாசினோ ஒரு கல்யாண மன்னன். இதுவரை 8 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு பெண்ணுடனும் 2 அல்லது 3 ஆண்டுகள் வாழ்ந்து விட்டு விவாகரத்து செய்திருக்கிறார். விவாகரத்து செய்யும் பெண்களுக்கு செட்டில்மெண்டும் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் 83 வயதான அல் பாசினோ, கடந்த ஆண்டு 29 வயதான நூர் அல்பலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மூன்று மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.தற்போது அவரையும் விவாகரத்து செய்திருக்கிறார் அல் பாசினோ.
இந்த முறை ஒரே ஒரு வித்தியாசம் விவாகரத்து கேட்டது நூர் அல்பலா. தனது முன்னாள் காதலுடன் சேர்ந்து வாழ விரும்பிய அல்பலா அதையே காரணமாக கூறி விவாகரத்து பெற்றுள்ளார். முன்பு விவாகரத்து செய்த மனைவிகளின் குழந்தைகளில் வளர்ப்பு செலவை அல் பாசினோ ஏற்றார். இந்த முறை நூர் அல்பலா என் குழந்தையை நானே வளர்த்துக் கொள்கிறேன். என்று கூறிவிட்டார்.