‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
2023ம் வருட தீபாவளிக்கு கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்', ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடிக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இவற்றில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. 'ஜப்பான்' படத்திற்கான டப்பிங் ஆரம்பமாகிவிட்டது என்றும் தெரிவித்துவிட்டார்கள். ஆனால், 'அயலான்' படம் பற்றிய எந்தவிதமான அப்டேட்டையும் அதன் தயாரிப்பாளர் வழங்கவில்லை.
கடந்த மே மாதம் 'அயலான்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் 'டீசர் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது,' என்று டுவீட் போட்டிருந்தார்கள். அதற்குப் பிறகு அப்படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்டையும் கடந்த ஐந்து மாதங்களாகத் தரவில்லை.
அப்படம் சயின்ஸ் பிக்ஷன் படம் என்பதால் அதன் விஎப்எக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லையாம். அதனால், பட வெளியீடு மேலும் தள்ளிப் போகலாம் என்கிறார்கள். அதனால், தீபாவளி போட்டியிலிருந்து 'அயலான்' விலக வாய்ப்புகள் அதிகம் என்பது கோலிவுட்டில் லேட்டஸ்ட் தகவல்.