பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? | பிளாஷ்பேக்: புதுப்புது அனுபவங்களோடு 'த்ரில்லர்' கதையாக வந்து, திகைப்பில் ஆழ்த்திய சிவாஜியின் “புதியபறவை” | மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் | காதல் கொண்டேன் 2 வரும் : சோனியா அகர்வால் தகவல் | ஒரே வாரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'மோனிகா' பாடல் | எளிமையாக நடந்த தலைவன் தலைவி வெற்றி விழா | ‛எக்ஸ்க்ளூசிவ்' போட்டும் இறங்கிப் போன 'வார் 2' |
சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகன் கடந்த 2021ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்குவதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அதைபோலவே மேலும் இரண்டு பேரிடம் 8 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரனையில் தெரியவந்தது.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் சந்திரசேகரனை கைது செய்துள்ளனர். இந்நிலையில், சீரியல் நடிகையும் ரவீந்தரின் மனைவியுமான மகாலெட்சுமி, ரவீந்தருக்கு சிறையில் விஐபிகளுக்கு வழங்கப்படும் ஏ-கிளாஸ் சிறை வழங்கவேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மற்றொரு மனுவில் ரவீந்தரை ஜாமினில் வெளிவிடக்கோரியும் கேட்டிருந்தார். இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம் உடனடியாக மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.