வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் அவருக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்த நிலையில், தற்போது இந்தியன்-2 படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வரும் கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து எச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களிலும் அடுத்தடுத்து நடிக்கப் போகிறார் கமல்ஹாசன். இப்படி கமலின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்ததை அடுத்து அவரது முந்தைய சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் திரைக்கு வர தொடங்கி உள்ளன.
சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலைவில், அடுத்தபடியாக ஆளவந்தான் படமும் விரைவில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல் நடித்த பேசும் படம் என்ற படமும் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. தெலுங்கில் புஷ்பக் என்ற பெயரில் எடுக்கப்பட்டு தமிழில் பேசும்படம் என்ற பெயரில் வெளியானது.
இது குறித்த தகவலை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ரிலீஸாகிறது. இந்த படம் 1987ம் ஆண்டு 35 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டு ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதோடு, வசனமே இல்லாமல் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.