மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
வரும் அக்.,5ம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை சிறப்பு மாடத்தில் அமர்ந்து கண்டுகளிப்பதற்கான 'கோல்டன் டிக்கெட் பார் இந்தியன் ஐகான்ஸ்' என்ற திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகள் அந்தத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்த வகையில் பாலிவுட் நடிகர்அமிதாப் பச்சனுக்கு இந்த கோல்டன் டிக்கெட் சமீபத்தில் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, உலக கோப்பை போட்டிகளை கண்டுகளிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கி கவுரவித்துள்ளார். இதன் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.