தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகை மீனா சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில் அண்ணாத்த என்கிற படத்தில் மட்டும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மற்றபடி அவர் மலையாள திரையுலகில் முக்கியத்துவம் கொடுத்து செலக்டிவான படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் திரிஷ்யம் 2, புரோ டாடி ஆகிய படங்களில் நடித்த மீனா அதன் பிறகு தனது கணவரை இழந்த சோக நிகழ்வு காரணமாக சில மாதங்கள் நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ள மீனா மலையாளத்தில் உருவாகி வரும் அனந்தபுரம் டைரீஸ் என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இதில் மிகுந்த பிரச்னைகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையே வழக்கறிஞராக துடிக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மீனா. இப்படி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மீனா நடிப்பது இதுதான் முதல் முறை.
இந்த படத்தை ஜெய ஜோஸ் ராஜ் என்பவர் இயக்குகிறார். வழக்கறிஞர் கதை என்றாலும் இதில் ஒரு குறிப்பிட்ட பகுதி கதை கல்லூரியில் நடைபெறும் விதமாக படமாக்கப்பட்டு உள்ளது. இதில் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். மேலும் நடிகர் மனோஜ் கே ஜெயன் இதில் இன்னொரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.